உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

காளாத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில்  இன்று நடக்கும் தேரோட்டத்தை முன்னிட்டு, காளாத்தீஸ்வரர்– ஞானாம்பிகை திருக்கல்யாணம் நேற்று  நடந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகைகோயில் புராதன சிறப்பு பெற்றது. காலசர்ப்பதோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது. ராகு கேது தம்பதி சகிதமாக எழுந்தருளி உள்ளனர். 80 ஆண்டுஓடாமல் இருந்த தேரோட்டம் சில ஆண்டிற்கு நடந்தது.  இந்த ஆண்டிற்கான தேரோட்ட நிகழ்ச்சிகள் பிப். 18 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்களாக வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். தினமும் மண்டகப்படி நடந்தது.

நேற்று காலை கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு,  சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 10:00 மணிக்கு காளாத்தீஸ்வரர்– ஞானாம்பிகை  திருக்கல்யாணம் நடந்தது. காளாத்தீஸ்வரர் வெண்பட்டிலும், ஞானாம்பிகை சிவப்பு பட்டிலும்  அலங்காரத்தில் எழுந்தருளினர்.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோகிலாபுரம் கிராம மக்கள், உத்தமபாளையம் கர்ணம் குடும்பத்தினர்  செய்தனர். தக்கார் பாலகிருஷ்ணன், அனைத்து சமுதாய சங்க நிர்வாகிகள், இந்துஆன்மிக நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று தேரோட்டம்:  இன்று அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் அம்மன் தேர் ஏறும் நிகழ்ச்சி  நடக்கிறது.     காலை 10.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !