மாசி மக திருவிழா: பல்லக்கு ஊர்வலம்
ADDED :2878 days ago
திம்மராஜம்பேட்டை: திம்மராஜம்பேட்டை சிவன் கோவிலில், மாசி மக பல்லக்கு உற்சவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், நேற்று, 77ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் ராமலிங்கேஸ்வரரை வழிபட்டனர்.