கும்பாபிஷேகம் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2889 days ago
நங்கவள்ளி: நங்கவள்ளி அடுத்த, சாணாரப்பட்டி கரட்டூர், சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதையொட்டி, காவிரியிலிருந்து புனிதநீர், நேற்று கொண்டு வரப்பட்டது. அவற்றை, வனவாசி மேல்சாலை காளியம்மன் கோவிலில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கரட்டூர் காளியம்மன் கோவிலுக்கு, தீர்த்தக் குடங்களில் ஊர்வலம் எடுத்துச்சென்றனர். தொடர்ந்து நடந்த பூஜையில், பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.