பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2815 days ago
பழநி, மாசி மகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் உலக நலன்வேண்டி 1008 சங்காபிஷேகம், யாகபூஜை நடந்தது.
பவுர்ணமி மாசிமகத்தை முன்னிட்டு, உலக நலன்வேண்டி, பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில், பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் குழுவினர் யாகசாலையில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கும்ப கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், ஸ்கந்தயாகம் மற்றும் வேதமந்திரங்கள் முழங்கினர். பகல் 12:00மணி உச்சிகாலபூஜையில், மூலவருக்கு புனித கலசகும்ப நீர் அபிஷேகம், சங்காபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.