உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையை ஆட்சி செய்ய அருணாசலேஸ்வரருக்கு மகுடம்

திருவண்ணாமலையை ஆட்சி செய்ய அருணாசலேஸ்வரருக்கு மகுடம்

தி.மலை: திருவண்ணாமலையை ஆட்சி செய்ய, அருணாசலேஸ்வரருக்கு மகுடம் சூட்டும் விழா, கோவிலில் நடந்தது. திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு, குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை நினைத்து வழிபட்டபோது, அருணாசலேஸ்வரரே, அவருக்கு குழந்தையாக பிறந்தார் என தல புராணங்கள் கூறுகின்றன.

அதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும், தந்தையாகிய வள்ளாள மஹாராஜாவிற்கு, மாசி மக தீர்த்தவாரியில், பள்ளிக்கொண்டாடப்பட்டு கிராமத்தில் உள்ள, துரிஞ்சலாற்றில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தீர்த்தவாரி முடிந்து, கோவிலிற்கு திரும்பிய அருணாசலேஸ்வரருக்கு, தந்தையாகிய வள்ளாள மஹாராஜா ஆண்டு வந்த பகுதியை ஆட்சி செய்ய, மன்னருக்கு சூட்டப்படும் மகுடம் சூட்டும் விழா, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்தது. இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !