வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலம்
ADDED :2880 days ago
சென்னை:வைகுண்ட தர்மபதி அவதார நாள் ஊர்வலம், நாளை நடக்கிறது.அய்யா வைகுண்ட தர்ம பதியின், 186ம் ஆண்டு அவதார திருநாளை முன்னிட்டு மணலி புதுநகர், வைகுண்ட தர்மபதி பக்தர்கள் குழு சார்பில் நாளை, பழைய வண்ணாரப்பேட்டை, நாராயணப்ப நாயக்கன் தெருவில் உள்ள, தனியார் கல்யாண மண்டபத்தில் இருந்து, ஊர்வலம் புறப்படுகிறது. தர்மபதியின் அகில திரட்டு ஆகமத்தை வைத்து, காலை, 5:30 மணிக்கு, ஊர்வலம் நடக்கிறது. பக்தர்கள் குடும்பத்துடன், நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, டி.எச்.ரோடு வழியாக, பகல், 12:00 மணிக்கு, மணலி புதுநகர், அய்யா கோவிலை சென்றடைவர்.