உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘இலை” சேர்ந்தா இரு மடங்கு

‘இலை” சேர்ந்தா இரு மடங்கு

துளசி என்னும் சொல்லுக்கு “ஒப்பிட முடியாதது அல்லது உயர்ந்தது” என்பது பொருள். துளசி இலையால் அர்ச்சிப்பது, துளசி மாலை சாத்துவது விஷ்ணுவுக்கு விருப்பமானவை. சுவாமிக்கு நைவேத்யம் படைக்கும் போது, அதன் மீது துளசி தூவுவது புனிதமானதாகும். அன்னம், ஆடை தானம் அளிக்கும் போது அதன் மீது துளசி வைத்து கொடுத்தால் இரு மடங்கு புண்ணியம் கிடைக்கும். “ஒரே ஒரு துளசி இலையால் பூஜித்தாலும், அவரை தன் அடியவராக ஏற்று மகிழ்வேன்” என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமயம் சத்தியபாமாவுக்கும், ருக்மணிக்கும் நடந்த போட்டியில் கிருஷ்ணரின் எடைக்கு எடை தங்கம்  வைத்த போது, தராசின் தட்டு சமமாகவில்லை. ருக்மணி பக்தியுடன் ஒரு துளசி இலையை வைக்க தராசு சம நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !