கோபத்தை கிளறுவதால் என்ன லாபம்?
ஒருவர் கோபமாக பேசி கொண்டிருந்தால் அவரது கோபத்தை மேலும் கிளறும் வகையில் பேசுவது, நம் மனதுக்கு வேண்டுமானால் ஆறுதல் தருவது போன்ற மாயையை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த கோபமான வார்த்தைகள் எதிராளிக்கு ஆத்திரத்தை கிளப்பி, கைகலப்பு வரை போய்விட்டால் உயிருக்கு ஆபத்து நேரும். அலுவலகத்தில் அதிகாரி கோபப்பட்டால் அமைதி காத்து விடுவதே நல்லது. மீறி, நாம் பேசினால் அந்நேரத்தில் அவர் விட்டு விட்டால் கூட என்றாவது ஒருநாள் பழிவாங்க ப்படலாம். இந்த சிலநிமிட கோபத்தால் வேலையிழந்து, தன்னையும் குடும்பத்தையும் சிக்கலில் தவிக்க விடுவது அறிவுடையவன் செயல் அல்ல. நியாயத்துக்கு புறம்பாக நாம் கண்டிக்கப்பட்டால் அதற்குரிய தண்டனையை தரும் அதிகாரம் கடவுளிடம் உள்ளது. அவர் சம்பந்தப்பட்டவர்களை நேரம் வரும் போது கடுமையாக தண்டிப்பதுடன் செய்த தவறை உணரவும் வழி ஏற்படுத்தி கொடுப்பார். “பணிவான பதில் கோபத்தை மாற்றி விடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தை கிளப்பி விடும்,” என்கிறார் இயேசு.