பன்னீர் அபிஷேகம்!
ADDED :2817 days ago
பரம்பொருளான பரமேஸ்வரருக்குப் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுவதால் சகல சுகங்களும் ஸித்திக்கும் என்பார்கள் பெரியோர்கள். தற்போது ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்பெற்ற பன்னீரைப் பயன்படுத்துகிறோம். முற்காலத்தில் பன்னீர் எப்படித் தயாராகும் தெரியுமா? பனித்துளிகளைச் சேர்த்து இரண்டடுக்குள்ள மண் பாத்திரத்தில் வைத்துக் குளிரூட்டி, அத்துடன் வாசனை திரவியங்களைச் சேர்த்து, தூய்மையான பன்னீர் தயாரிக்கப்படுமாம். சிவன்கோயில்களில் பிரதோஷ காலத்தின்போது, பிராகாரத்தில் சுவாமி இரண்டாம் முறை வலம் வரும்போது, ஈசான பாகத்தில் நிறுத்தி, பன்னீரால் அபிஷேகம் செய்யும் வழக்கம் உண்டு.