அருவங்காடு ஐயப்பன் கோவில் ஆண்டு விழா
ADDED :3141 days ago
குன்னுார்:குன்னுார் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில், 45வது ஆண்டு விழா நடந்தது. கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பகவதி சேவை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், கலச பூஜை, மகா தீபாராதனை நடந்தன. வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, ஏராளமான சிறுமியர் மற்றும் பெண்கள் பங்கேற்ற தாலப்பொலி ஊர்வலம் நடந்தது.செண்டை மேள வாத்தியங்கள் முழங்க நடந்த ஐயப்பன் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மகா தீபாராதனை, மங்கள ஆரத்தி, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.