உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தையூர் மாரியம்மன் கோவில் திருவிழா

சந்தையூர் மாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணராயபுரம்: இரும்பூதிப்பட்டி அடுத்த, சந்தையூர் மாரியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்., சந்தையூரில், மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் அம்மனுக்கு குளிர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் காலை, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் புனித நீர் கொண்டு வந்தனர். நேற்று அதிகாலை, கரகம்பாலிக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில், சிவாயம், இரும்பூதிப்பட்டி, சந்தையூர், கோடங்கிப்பட்டி பகுதி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !