உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமநாதீஸ்வரருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய தேருக்கான பூஜை

காமநாதீஸ்வரருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய தேருக்கான பூஜை

தலைவாசல்: தலைவாசல் அருகே, புதிய தேர் செய்வதற்கு, முகூர்த்த கால் நட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. தலைவாசல், ஆறகளூரில் காமநாதீஸ்வரர் ஆலயம், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும், பங்குனி மாதம் தேர்த்திருவிழா, சிறப்பாக நடைபெறும். விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் முக்கிய வீதிகளில் வலம் வருவார். ஆனால், கோவில் தேர், சிதிலமடைந்ததால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தேரோட்டம் நடைபெறாமல் உள்ளது.இந்நிலையில் காமநாதீஸ்வரருக்கு புதிய தேர் செய்து தர, சென்னையில் உள்ள மகா மேரு மண்டலி டிரஸ்ட் அமைப்பினர் முன்வந்துள்ளனர். 35 லட்சம் ரூபாய் செலவில், தேர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தேரின் அச்சு மற்றும் சக்கரத்தை இரும்பினால் செய்து தர, அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று காலை, கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள், பக்தர்கள் முன்னிலையில் புதிய தேர் செய்யும் பணிக்கு, முகூர்த்த கால் நடப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. ஓராண்டில், பணிகள் நிறைவடையும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !