மலையனூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் பூஜை
ADDED :2791 days ago
கெங்கவல்லி: கூடமலையில் உள்ள, மலையனூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தில், மலையனூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. நேற்று, மாசி மாத சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணியளவில், வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பூக்கூடை எடுத்து வருதல் நிகழ்வு நடந்தது. மதியம், 1:30 மணியளவில், பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கெங்கவல்லி, கூடமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.