பூண்டி தேர்த்திருவிழா: வெள்ளியம்பல தரிசன காட்சி
ADDED :2790 days ago
திருப்பூர்: திருமுருகன்பூண்டி தேர்த்திருவிழாவில், நேற்று நடந்த தரிசன காட்சியில், வெள்ளியம்பலத்தில், நடராஜ பெருமான், சிவகாமியம்மை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி தேர்த்திருவிழா, பிப்., 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்1ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் நேற்று (மார்.,5ல்) வெள்ளியம்பல தரிசன காட்சி நடைபெற்றது. வெள்ளியம்பலத்தில், நடராஜ பெருமான், சிவகாமியம்மை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீர்விழா நடக்கிறது.