லஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :2851 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பேட்டை, லஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டையில் அமைந்துள்ள லஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த ஜனவரி, 22ல் நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழா வரும், 11 காலை, 7:00 மணி முதல் விஷ்வசேன ஆராதனை, கலச ஸ்தாபனம் பூஜைகள் நடக்கிறது. இறுதியாக, மங்கள ஆரத்தி நடக்க உள்ளது. இதில், அனைத்து பக்தர்களும் பங்கேற்று சுவாமி யின் அருள் பெற வேண்டு மென கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.