உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில் மரத்தேருக்கு ரூ.2 லட்சத்தில் இரும்பு சக்கரம்

பெருமாள் கோவில் மரத்தேருக்கு ரூ.2 லட்சத்தில் இரும்பு சக்கரம்

வாழப்பாடி: வாழப்பாடி, ஸ்ரீ சென்றாயப்பெருமாள் கோவில் மரத்தேருக்கு, 76 ஆண்டுகளுக்கு பின், ரூ. 2 லட்சம் மதிப்பில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாழப்பாடி, அக்ரஹாரத்தில் உள்ள, சென்றாய பெருமாள் கோவிலுக்கு, 1942ல், மரத்தேர் உருவாக்கப்பட்டது. 45 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேரோட்டத்தின்போது, விபத்து ஏற்பட்டு, தேர் பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் சித்திரை அல்லது வைகாசியில், தேரோட்டம் நடத்த, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், இரண்டு லட்சம் ரூபாய் செலவில், திருச்சி, பெல் நிறுவனத்திலிருந்து, இரு அச்சுகள், நான்கு இரும்பு சக்கரங்களை, தேரில் பொருத்தியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின், தேரோட்டம் நடக்கவுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !