யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரமோற்சவம் துவக்கம்
ADDED :2768 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரமோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ தலங்களில் சிறப்பு பெற்று விளங்கும், யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரமோற்சவம், ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதை தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் திருக்கச்சி நம்பி தெரு வழியாக சின்னகாஞ்சிபுரம் வரை சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல் இரவு,7:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மூன்றாம் நாள் காலை, கருட சேவை உற்சவமும், ஏழாம் நாள் திருதேர் உற்சவமும் நடைபெறுகிறது. வரும், 20ல், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.