உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெமிக்கல் இல்லாத விபூதிக்காக பழனி விபூதி சித்தர் நடைபயணம்

கெமிக்கல் இல்லாத விபூதிக்காக பழனி விபூதி சித்தர் நடைபயணம்

திருச்செந்துார்:பழனி, திருச்செந்துார் கோயில்களில் பாதிப்பில்லாத திருநீறு உபயோகப்படுத்த வலியுறுத்தி விபூதிசித்தர் நடைபயணம் மேற்கொள்கிறார். திண்டுக்கல், பழனியை சேர்ந்தவர் ஆதிமூலம். விபூதி சித்தர் என்ற பெயருடன் ஆலய பாதுகாப்பு குழுவை நடத்திவருகிறார். திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு வந்திருந்தார். அவர் கூறியதாவது: பசுஞ்சாணம், மூலிகைகள் பயன்படுத்தி சித்தர்கள் காலத்தில் தயாரித்தது போல திருநீறு தயாரிக்கிறேன். ஒரு கிலோ தயாரிக்க 700 ரூபாய் செலவாகிறது. தற்போது பழனி, திருச்செந்துார் உள்ளிட்ட அறநிலையத்துறை கோயில்களில் அபிசேகத்திற்கு பயன்படுத்தும் திருநீறு, கெமிக்கல், சுண்ணாம்பு கலந்தவை.இதனால் பழனி முருகன் சிலை போன்றவை பாதிப்பிற்குள்ளாகும். சித்தர்கள் தயாரித்த திருநீறுவை தயாரித்து தருகிறேன் என அறநிலையத்துறைக்கு கூறியிருக்கிறேன். ஆனால் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள். எனவே இதனை வலியுறுத்தி மே7 ல் பழனியில் இருந்து சென்னைக்கு நடைபயணமாக சென்று தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !