கனவில் பிறந்த உலகம்
ADDED :3072 days ago
மாயாஜாலத்தில் வல்லவரான விஷ்ணுவுக்கு ‘மகாமாயன்’ என்று பெயர். தொல்காப் பியம் இவரை, ‘மாயோன்’ என குறிப்பிடுகிறது. இவரின் பெரிய ஜாலம் தூங்கிக் கொண்டே பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்வது. ஆதிசேஷன் என்னும் பாம்பு படுக்கையில் தூங்கும் விஷ்ணுவுக்கு எழுந்த கனவே இந்த பிரபஞ்சம். அந்த கனவில் தான் உயிர்கள் படைக்கப்பட்டு இயங்கி கொண்டே இருக்கின்றன. அவரது கனவு கலையும் நாளில் உலக இயக்கம் முடிவுக்கு வந்து விடும்.