உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைரியம் தரும் ஜெபம்

தைரியம் தரும் ஜெபம்

நம்மை பல கஷ்டங்கள் துரத்துகின்றன. சிலருக்கு பணி அதிகம். சிலருக்கு குடும்ப  பிரச்னைகள் அதிகம். பிரச்னைகளைச் சுமப்பவர்கள் ஆண்டவரிடம் ஜெபித்தால் மனபாரம் குறையும். இதோ ஒரு ஜெபம்! ‘ஆண்டவரே, எங்கு வேண்டுமானாலும்என்னை அனுப்பும்! ஆனால், நீர் மாத்திரம் என்னோடிரும். எவ்வளவு சுமையானாலும் என் மீது சுமத்தும்! ஆனால் நீர் மாத்திரம் என்னை தாங்கி கொள்ளும். எனக்குள்ள எல்லா கட்டுகளையும் துண்டித்து விடும்! ஆனால் என்னை மாத்திரம் உம்மோடு இணைத்து கட்டிக் கொள்ளும். இந்த ஜெபத்தை தினமும் சொல்ல மன தைரியம்  உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !