உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ - விஷ்ணு கோவிலில் ஜலநாராயணருக்கு அபிஷேகம்

சிவ - விஷ்ணு கோவிலில் ஜலநாராயணருக்கு அபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னதியில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, அபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர், பூங்கா நகரில் உள்ள, சிவ - விஷ்ணு கோவிலில், நான்கு கரத்துடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அருள்கிற ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கீரிவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், அதை தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணியளவில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !