உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன் கோவில் விழா: கடைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்

பெரிய மாரியம்மன் கோவில் விழா: கடைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன், வகையறா கோவில்கள் திருவிழா, வரும், 20ல் தொடங்குகிறது. விழாவையொட்டி தற்காலிக கடைகள் ஏலம், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நேற்று நடந்தது. பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை கமிஷனர் பழனிகுமார், செயல் அலுவலர் ரமணிகாந்தன் ஏலத்தை நடத்தினர். இதில், கடை எண், இரண்டு முதல், 12 வரை, 8.97 லட்சம் ரூபாய்; 13 முதல், 22 வரை கடைகள், 5.50 லட்சம் ரூபாய்; 23 முதல், 34 வரை, 6.71 லட்சம் ரூபாய்; காரைவாய்க்கால் கோவில் கடைகள், 27 ஆயிரத்து, 500 ரூபாய்க்கும் ஏலம் போனது. பந்தல் விளம்பரம் செய்ய, 6.51 லட்சம் ரூபாய், கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமை, 70 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 28.46 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. பிரப் ரோட்டில் மேம்பாலப்பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியால், கடந்த ஆண்டை காட்டிலும், 15 லட்சம் ரூபாய் அளவுக்கு குறைவாக ஏலம் போனதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !