சின்ன காஞ்சியில் திருவாசகம் முற்றோதல்
ADDED :2765 days ago
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில், திருவாசக முற்றோதல் நடந்தது.காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், பல்வேறு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சைவ, சமய இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில், திருவாசகம் முற்றோதல், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள, திருமுறை அருட்பணி மாளிகையில் நடந்தது.திருநெல்வேலி, சிவநெறி அருட்பணிமன்ற, திருவாசக முற்றோதல் குழுவினர், தி.ப.முத்தையா பிள்ளை தலைமையில், நிகழ்ச்சியை நடத்தினர்.