உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓய்வு அளவையர் மூலம் கோவில் நிலம் கணக்கெடுப்பு

ஓய்வு அளவையர் மூலம் கோவில் நிலம் கணக்கெடுப்பு

மேட்டூர்: கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. மேட்டூர் வட்டத்தில், அறநிலைய கட்டுப்பாட்டில் கொளத்தூர், பாலவாடி ஜலகண்டேஸ்வரர்; மேட்டூர், ஞானதண்டாயுதபாணி; மேச்சேரி, பத்ரகாளியம்மன்; நங்கவள்ளி பெருமாள் உள்பட, 220 கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக, விளைநிலங்கள், கடைகள் உள்ளன. அதில், பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இரு வாரங்களாக, கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், கடைகள், ஓய்வு பெற்ற நில அளவையர் மூலம் கணக்கெடுத்து, அளவீடு செய்யும் பணி நடக்கிறது. மார்ச்சுக்குள், பணி முடிந்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !