கருப்பண்ண சுவாமி கோவிலில் பூமி பூஜை
ADDED :2766 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கருப்பண்ண சுவாமி கோவில் பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை, கரூர் - திருச்சி பழைய சாலையில், தென்கரை வாய்க்கால் அருகே, பழமையான கருப்பண்ணன் சுவாமி கோவில் உள்ளது. கட்டடம் சிதலமடைந்து காணப்பட்டதால், அதை இடித்து விட்டு, புதிதாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை, கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.