உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரகாரன் கோவிலில் 19ல் முப்பூசை திருவிழா

வீரகாரன் கோவிலில் 19ல் முப்பூசை திருவிழா

எலச்சிபாளையம்: வீரகாரன் கோவிலில், வரும், 19ல் முப்பூசை திருவிழா நடக்கவுள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை புதூரில், புடவைக்காரியம்மன், வீரகாரன் கோவிலில், வரும், 19ல் முப்பூசை திருவிழா நடக்கிறது. 17 இரவு, 9:00 மணிக்கு ஊர் கிணற்றில் இருந்து, கோவிலுக்கு சக்தி அழைத்து வருதல், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தொடர்ந்து, சக்தி பானை அழைத்து வருதல், புடவை அலங்காரம், பச்சைபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும், 18 இரவு, 11:00 மணிக்கு, பொங்கல் பானையுடன் வீரகாரன் கோவிலுக்கு படைக்கலம் செல்லுதல், 19 அதிகாலை, 3:00 மணிக்கு, கன்னிமார் அழைத்தல், கன்னிமார் பூஜை, ஆடு, கோழி பலியிடுதல் நடக்கிறது. 6:00 மணிக்கு காவுசோறு போடப்படும். 8:00 மணிக்கு வீரகாரன் கோவிலில் இருந்து, வீட்டுகோவிலுக்கு குடிபுகல் நடைபெறும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !