உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்

குன்றத்தில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டுடன் துவங்கியது.
ஜன. 7 வரை தினம் மாணிக்கவாசகர் பல்லக்கில் கோயில் திருவாட்சி மண்டபத்தை மூன்று முறை வலம் வருவார். ஓதுவார்களால் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படும். ஜன. 7ல் காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் நிகழ்ச்சியும், இரவு கோயில் முன் ராட்டினத்தில் சுவாமி எழுந்தருளி ராட்டின திருவிழாவும் நடக்கும். ஜன. 8 அன்று காலை 4.30 மணிக்கு மூலவர்கள் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சாம்பிராணி தைலகாப்பு சாத்துப்படியாகி, உற்சவர்கள் பூ சப்பரத்தில் தனித்தனியாக கிரிவலம் வலம் வந்து அருள்பாலிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !