ராமேஸ்வரம் கோவிலில் 2014ல் கும்பாபிஷேகம்
ADDED :5064 days ago
ராமேஸ்வரம்:""ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், வரும் 2014ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, இந்து அறநிலையத் துறை செயலர், ராஜாராம் கூறினார்.ராமேஸ்வரம் கோவிலில், நேற்று ஆய்வு மேற்கொண்ட இவர் கூறியதாவது: ராமேஸ்வரம் கோவிலில், நான்கு கோடி ரூபாயில், நடந்து வரும் வடக்கு தெற்கு, ராஜகோபுர பணிகள் முடிவுற்ற பின், 2014ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் நலன் கருதி, இரண்டு விடுதிகள் கட்டப்படும். 42 லட்ச ரூபாயில் நவீன அன்னதான கூடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களிலும், திடகாத்திரமான தகுதி வாய்ந்த நபர்கள், செக்யூரிட்டி பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு, ராஜாராம் கூறினார்.