ஸ்ரீவி.,பெரியமாரியம்மன் கோயிலில் நாளை பூக்குழி
ADDED :2767 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கும்நிகழ்ச்சி நாளை ( மார்ச் 17 )நடக்கிறது.மார்ச் 6 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய பூக்குழிவிழாவின் 12ம் நாளான நாளை, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்குமேல் பூவளர்த்தலும், காலை 9:00 மணிக்கு அம்பாள் பந்தலுக்கு எழுந்தருளலும் நடக்கிறது. மதியம் 1:15 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி பிரார்த்தனை செலுத்தலும் நடக்கிறது. விருதுநகர், மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.மார்ச் 18 காலை 10:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் நாகராஜன், செயல் அலுவலர் சுந்தரராசு செய்துள்ளனர்.