உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை ஸ்வர்ணாகர்ஷண சாய்பாபா கோயிலில் மண்டலாபிஷேகம்

வல்லக்கோட்டை ஸ்வர்ணாகர்ஷண சாய்பாபா கோயிலில் மண்டலாபிஷேகம்

ஸ்ரீபெரும்பத்தூர்: வல்லக்கோட்டையில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண சாய்பாபா கோயிலில் மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் இருக்கும் ஷீரடி சாய்பாபா, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்தூர் அருகில் வல்லக்கோட்டையில் “ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண சாய்பாபாவா அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் (28-01-2018) அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை தொடர்ந்து, நேற்று (மார்.,15ல்) மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  விழாவில் 108 சங்குகளை கொண்டு பாபாவிற்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள், ஆரத்தி மற்றும் அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சி.எஸ்.கே. வி. டிரஸ்ட் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !