ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மலரஞ்சலி
ADDED :2767 days ago
திருப்பூர் : திருப்பூரில், ஜன கல்யாண் மருத்துவ அணி, இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாட்சி கால நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில தலைவர் தணிகாசலம் தலைமை வகித்தார். துணை தலைவர் மணியன், சட்ட ஆலோசகர் தர்மையா முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்ட தலைவர் அருணாசலம், ஈரோடு செயலாளர் முருகேசன், மாநில அமைப்பாளர் ராமமூர்த்தி, துணை செயலாளர் சேகர் உள்ளிட்டோர், சுவாமிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், குருபூஜை நாளில், இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி, நலவாழ்வு மருத்துவ கருத்தரங்கம் ஜன கல்யாண் அமைப்பு சார்பில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.