உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி

ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி

திருவள்ளூர்:திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை, மதியம் நடந்தது.மாலையில், ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்தார். ஒண்டிக்குப்பம், சாய்பாபா கோவிலில், காலை, மதியம், மாலை மற்றும் இரவு என, நான்கு நேரங்களில், ஆரத்தி நடந்தது.இதே போல், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.நெய்வேலி கிராமத்தில் உள்ள ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகமும், மதியம், மகா மங்கள ஆரத்தியும், இரவு, ஸ்வஸ்தி பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !