உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமி விழா: நாளை கொடியேற்றம்

ராமநவமி விழா: நாளை கொடியேற்றம்

பரமக்குடி:பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராமநவமி விழா நாளைகொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதனையொட்டி இன்று காலை 10:00 மணிக்கு மேல் அனுக்ஞை, அபிேஷகமும் நடக்கிறது. இரவு காப்பு கட்டப்படும். நாளை காலை 10:15 முதல் 11:00 மணிக்குள் ராமர் சன்னதிமுன் கருட கொடியேற்றப்படும். மாலை வாமன அவதாரத்தில் ராமர் வீதியுலா வருவார்.தொடர்ந்து தினமும் காலை திருமஞ்சனமும், மாலை காளிங்க, பாண்டுரெங்க, கூடலழகர்,கள்ளழகர், தவழும் கண்ணன் ஆகிய அலங்காரத்தில் வீதியுலா வருவார்.மார்ச் 26ல் காலை 10:51 மணிக்கு ராமர் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும், 12:00 மணிக்குமேல் கோதண்டராமசாமிக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாணமும், இரவுபட்டணப்பிரவேசம் நடைபெறும். மறுநாள் இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !