உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கொடுமுடி: ஊஞ்சலூர், மாரியம்மன் கோவிலில் வரும், 29ல், தேர்த்திருவிழா நடக்கிறது. கொடுமுடி அடுத்த, ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, வருடந்தோறும் மாசி மாதம் நடக்கும். நடப்பாண்டு திருவிழா கடந்த, 13ல், பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 18ல், கிராம சாந்தி, பூச்சொரிதல், 19ல், கொடியேற்றம், 20 முதல், 27 வரை, சுவாமி புறப்பாடு நடக்கிறது. 28ல், பூக்குண்டம், 29ல், திருத்தேர் திருவிழா நடக்கிறது. 30ல், கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !