உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யுகாதி பண்டிகை: சேலம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

யுகாதி பண்டிகை: சேலம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

சேலம்: யுகாதி பண்டிகையையொட்டி, சேலம், குகை, ஜங்கமேஸ்வரர், வேதநாயகி கோவிலில், நேற்று, மூலவர், ஜங்கமேஸ்வரர் லிங்கம், அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, கற்பூர தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். இதையடுத்து, ஜங்கம் சமூக நலச்சங்கம் சார்பில், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், பால் மார்க்கெட் அருகே, அஷ்டலட்சுமி சமேத லட்சுமி நாராயணன் கோவிலில், சுவாமிக்கு, சிறப்பு அபி?ஷகம் செய்து, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது.

* சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சுவாமிக்கு, நேற்று காலை, சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. மாலை, விளம்பி ஆண்டிற்கான பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. அப்போது, புத்தாண்டில் கிடைக்கும் மழையளவு, செல்வம் உயர்வு, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, கிரக நிலைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. அதேபோல், ராஜகணபதி, அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், சின்னதிருப்பதி பெருமாள் கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !