உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம்

பங்குனி முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம்

நாமக்கல்: பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல், ஆஞ்சநேயர் ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக் கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடப்பதுண்டு. அதேபோல், நேற்று பங்குனி முதல் ஞாயிறை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் சாத்தப்பட்டது. 10:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !