உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திகம்பர் ஜெயின் சுவாமிகள் சக்தி அம்மாவுடன் சந்திப்பு

திகம்பர் ஜெயின் சுவாமிகள் சக்தி அம்மாவுடன் சந்திப்பு

வேலூர்: திகம்பர் ஜெயின் சுவாமிகள், சக்தி அம்மாவை சந்தித்து பேசினர். திகம்பர் ஜெயின் ஆச்சாரியா சுவாமிஜி, புஷ்ப தந்த் மகாராஜ் சாகர் சுவாமிகள், சுகர்ஜி சுவாமிகள், தனது குழுவினருடன், நேற்று காலை, வேலூர் அடுத்த ஓம்சக்தி நாராயணி பீடத்திற்கு வந்து, சக்தி அம்மாவை சந்தித்து, ஆன்மிகம் குறித்து பேசினர். வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கு, சென்ற அக்குழுவினர், லட்சுமி நாராயணியை தரிசனம் செய்தனர். பின், சுவர்ண லட்சுமிக்கு, அபிஷேகம் செய்த பின், ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !