ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா
ADDED :2794 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழாவினை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பூமாதேவி, ஸ்ரீதேவி மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்தானிகம் ஹயக்கிரிவாஸ் பஞ்சாங்கம் வாசித்தார்.ராஜீபட்டர், வாசுதேவபட்டர், வேதபிரான் சுதர்சனன், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.