ஆறுமுகநேரி சிவன் கோயிலில் திருவாதிரை திருவிழா துவக்கம்
ADDED :5065 days ago
ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி தேவார பக்த ஜன சபை மற்றும் சிவன் கோயிலில் திருவாதிரை திருவிழா துவங்கியது.ஆறுமுகநேரியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருவாதிரை திருவிழா கடந்த 30ம் தேதி துவங்கியது. தினமும் நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. வரும் 8ம் தேதி கோபூஜையும், ஆருத்ரா தரிசனமும், தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. லெட்சுமிமாநகரம் நடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்தில் 121ம் ஆண்டு திருவாதிரை உற்சவ விழா துவங்கியது.