பாளை., தியாகராஜநகரில் விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம் லட்சார்ச்சனை
திருநெல்வேலி:பாளை., தியாகராஜநகரில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உலக நன்மைக்காகவும், நாடு நலம் பெறவும், மக்கள் அமைதியாக வாழவும் வேண்டி பாளை., தியாகராஜநகர் 14வது தெற்கு தெரு ஆஸ்தீக சமாஜம் கட்டடத்தில் கடந்த டிச.11ம் தேதி முதல் தினமும் மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.ஆங்கில புத்தாண்டான நேற்று காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் லட்சார்ச்சனை நடந்தது.ஸ்ரீ சுக்த ஜபம், புருஷ சுக்த ஜபம், ஹோமம், சாலிக்கிராமத்திற்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது.பூஜைகளை கோபாலகிருஷ்ண வாத்தியார் தலைமையில் ஆஸ்தீக சமாஜம் நிர்வாகிகள் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜனவரி 5ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவு 9 மணிக்கு திவ்யநாம பஜனை நடக்கிறது.ஏற்பாடுளை ஆஸ்தீக சமாஜம் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.