உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முந்தி கல்யாணம் நடக்க...

முந்தி கல்யாணம் நடக்க...

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி புனர்பூசம் நட்சத்திரத்தில் நந்தி – சுயசாம்பிகை திருமணம் நடக்கும். இந்த ஆண்டு மார்ச்26ல் இரவு 7:00 மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். இதை  தரிசிக்க விரைவில் திருமணம் கைகூடும். ‘நந்தி கல்யாணம் கண்டால்  முந்திக் கல்யாணம்’  என்பது சொல் வழக்கு. இந்தக் கோயிலுக்கு அரியலூர்,  தஞ்சாவூர்  மற்றும் லால்குடியில் இருந்து செல்லலாம். தூரம் 28 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !