அனைத்தும் செய்யும் ஆண்டவர்!
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்ற வசனத்தை வாசித்திருப்பீர்கள். இதோ அவரால் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சி.
ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாக தாமதமானது. அவளுக்காக முயற்சிக்க
யாருமில்லை. இதனால், அவள் போதகரிடம் முறையிட்டாள். போதகர் அவளிடம்,
“எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தினமும் நூறு முறை சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்து” என்று சொல்லி அனுப்பினார், மூன்று மாதம் கழிந்தது. அவள் திருமண அழைப்பிதழுடன் போதகரை காண வந்தாள்.
“போதகரே! எனக்காக கர்த்தர் உண்மையாகவே யாவையும் செய்து முடித்தார்,” என்று
மகிழ்ச்சியுடன் கூறினாள்.
ஆதாம், ஏவாளை தோட்டத்தில் வைக்கும் முன்னர், கர்த்தர் அவர்களுக்காக சூரியன்,
சந்திரன், காற்று, உணவு, தண்ணீர், பறவைகள், மிருகங்கள், கனி வகைகள் எல்லா வற்றையும் படைத்து முடித்திருந்தார். அதையெல்லாம் கண்டபோது, ஆதாமின்
உள்ளம் நன்றியோடு பொங்கி, “எனக்காக என் தேவன் எத்தனை மேன்மைகளை செய்து
முடித்திருக்கிறார்,” என்று சொன்னாள்.
அதுபோலவே, கர்த்தர் நமக்காக சிலுவையில் மரித்து நித்திய ஜீவனை ஏற்படுத்தினார்.