சொத்து சேரும் யோகம் யாருக்கு கிடைக்கும்!
நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாயின் அருள் இருந்தால் சொத்து சேரும். அவருக்குரிய போற்றியை தினமும் படிக்க, சகோதர பாசம் வளரும். நோயும்தீரும்.
ஓம் அங்காரகனே போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் அருளும் நாதனே போற்றி
ஓம் அபய கரத்தானே போற்றி
ஓம் அவிட்ட நாதனே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
ஓம் அண்டினார் காவலனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆடு வாகனனே போற்றி
ஓம் ஆற்றல் மிக்கவனே போற்றி
ஓம் ஆணவம் அழிப்பவனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கருங்காலி சமித்தனே போற்றி
ஓம் கதி அருள்பவனே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் குருவின் நண்பனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவனே போற்றி
ஓம் சங்குக் கழுத்தனே போற்றி
ஓம் சசி மித்ரனே போற்றி
ஓம் சகோதர காரகனே போற்றி
ஓம் சக்தி ஆயுதனே போற்றி
ஓம் சாமகானப் பிரியனே போற்றி
ஓம் சித்திரை அதிபதியே போற்றி
ஓம் சிகப்புக் குடையனே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் செம்மீனே போற்றி
ஓம் செந்நீர் முத்தனே போற்றி
ஓம் செங்கண்ணனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செண்பகப் பிரியனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் செம்பு உலோகனே போற்றி
ஓம் செம்மாலை அணிபவனே போற்றி
ஓம் செவ்வாய் நாதனே போற்றி
ஓம் தனிச் சன்னதியுளானே போற்றி
ஓம் தவத்தால் உயர்ந்தவனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தனமளிப்பவனே போற்றி
ஓம் திருக்கோலனே போற்றி
ஓம் திருச்சிறுகுடி அருள்பவனே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தீன ரட்சகனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் துஷ்டரை அழிப்பவனே போற்றி
ஓம் துவரை விரும்பியே போற்றி
ஓம் துவர்ப்பு சுவையனே போற்றி
ஓம் தென் திசையானே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தெய்வத் தேரனே போற்றி
ஓம் தைரியம் அளிப்பவனே போற்றி
ஓம் நிலமகள் சேயே போற்றி
ஓம் நிலம் ஆள்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நெற்றிக்கண் தோன்றலே போற்றி
ஓம் பராக்கிரமனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பலம் அளிப்பவனே போற்றி
ஓம் பவளப் பிரியனே போற்றி
ஓம் பழநியில் அருள்பவனே போற்றி
ஓம் பரத்வாஜர் சீடனே போற்றி
ஓம் பரனருள் பெற்றவனே போற்றி
ஓம் பார்க்கவனே போற்றி
ஓம் பவுமனே போற்றி
ஓம் பிருத்வி பாலனே போற்றி
ஓம் பின்னும் செல்வோனே போற்றி
ஓம் பூமி அதிதேவதையனே போற்றி
ஓம் புரூரவசுக்கு அருளியவனே போற்றி
ஓம் புள்ளிருக்கு வேளூரானே போற்றி
ஓம் பொன் தேரனே போற்றி
ஓம் மங்களனே போற்றி
ஓம் மங்கலம் அளிப்பவனே போற்றி
ஓம் மருந்தாவோனே போற்றி
ஓம் மகரத்தில் உச்சனே போற்றி
ஓம் மாவீரனே போற்றி
ஓம் மிருகசீரிட நாதனே போற்றி
ஓம் முக்கோண மண்டலனே போற்றி
ஓம் முருகனருள் பெற்றவனே போற்றி
ஓம் முடி தரித்தவனே போற்றி
ஓம் மூன்றாமவனே போற்றி
ஓம் மென்னகையனே போற்றி
ஓம் மேன்மையளிப்பவனே போற்றி
ஓம் மேதையே போற்றி
ஓம் மேலோனவனே போற்றி
ஓம் மேஷக் கொடியோனே போற்றி
ஓம் மேஷராசி அதிபதியே போற்றி
ஓம் ரவி மித்ரனே போற்றி
ஓம் ரோக நாசகனே போற்றி
ஓம் வரத ஹஸ்தனே போற்றி
ஓம் வரம் அருள்பவனே போற்றி
ஓம் வியர்வை தோன்றலே போற்றி
ஓம் விருச்சிக ராசி அதிபதியே போற்றி
ஓம் வீரனாக்குபவனே போற்றி
ஓம் வீரபத்திரன் அம்சமே போற்றி
ஓம் வேல் ஆயுதனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் வைத்தியனே போற்றி
ஓம் சத்திரியனே போற்றி
ஓம் சமிப்பவனே போற்றி
ஓம் ஷேத்ரபாலனுக்கு தேவதையனே போற்றி
ஓம் ‘ஹ்ரிம்’ பீஜ மந்திரனே போற்றி
ஓம் செவ்வாய்த்தேவனே போற்றி!