சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
ADDED :2855 days ago
சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. இங்கு வைகாசிதோறும் 17 நாட்களுக்கு விழா நடக்கும். நேற்று முன் தினம் இரவு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் பின்தொடர பூஜாரி கணேசன் கொடியுடன் ரத வீதி சுற்றி ஊர்வலம் வந்தார். உபயதாரர் சார்பில் அம்மனுக்கு திருமஞ்சனம் சாற்றுதல் நடந்தது. முக்கிய நிகழ்வாக மே 29 ல் பால்குடம், அக்னிசட்டி, 30 ல் பூக்குழி, ஜூன் 5ல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, ஊழியர்கள் செய்து வருகின்றனர்.