உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்வு
உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந் துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிமாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
நடப்பாண்டில் வரும் ஏப்., 5ம்தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்த்திருவிழாவுக்காக, நேற்று மாலை, 6:30 மணிக்கு நோன்பு சாட்டப்பட்டது. அதற்குமுன் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அரளி, மல்லி, முல்லை , தாமரை , ஜாதிமல்லி, செண்பகம், வேப்பம் பூ, நொச்சி, சம்பங்கி உள்ளிட்டபல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அபிஷேகத்துக்கு, மலர்கள் வாங்கிக்கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், செயல்அலுவலர் சங்கரசுந்தரேசுவரன், பரம்பரை அறங்காவலர்ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.