ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :2793 days ago
உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை அருகே, குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும் மூன்றாவது செவ்வாய்க்கிழமை திருவாசகம் முற்றோதல் நடத்தப்படுகிறது.
அதன்படி, நேற்று நடந்த நிகழ்ச்சியில் தேவாரம், திருவாசகத்திலுள்ள பாராயணங்கள் படிக்கப்பட்டன. பக்தர்கள் குழு சார்பில் இன்னிசை பஜனை செய்யப்பட்டது. அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அம்மன், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற் று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.