கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில் ரூ.4.40 லட்சம்
ADDED :2863 days ago
கடம்பாடி: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில் உண்டியல்களில், 4.40 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. இக்கோவிலில், உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில், நேற்று உண்டியல்கள் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது.கடந்த டிச., 5ம் தேதி துவங்கி, நேற்று வரை, 4.40 லட்சம் ரூபாய்; 8 கிராம் தங்கம்; 194 கிராம் வெள்ளி கிடைத்தன.