சவண்டப்பூர் செல்லியாண்டி அம்மன் கோவிலில் பூச்சாட்டு
ADDED :2797 days ago
அந்தியூர்: அத்தாணி அருகேயுள்ள, சவண்டப்பூரில் பழமை வாய்ந்த செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில், இங்கு பொங்கல் விழா, மலர் பல்லக்கு உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா, பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது. நாளை அபிஷேகம், பச்சை பூஜை, பொங்கல் வைபவம், அம்மை அழைத்தல், மலர் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 23ல் மறு பூஜை, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.