உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில் யானை நலம் பெற வேண்டி சிறப்பு ஹோமம்

சுகவனேஸ்வரர் கோவில் யானை நலம் பெற வேண்டி சிறப்பு ஹோமம்

சேலம்: யானை உடல் நலம் பெற வேண்டி, சுகவனேஸ்வரர், ராஜகணபதி கோவில்களில், ‘ம்ருங்யஜெய, ஆயுஸ்ய’ ஹோமம் நடந்தது.

சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு, காலில் புண் ஏற்பட்டு, 2013 முதல், கோரிமேட்டிலுள்ள, மாந்தோப்பில் தனி இடத்தில் பராமரிக்கப்படுகிறது. தொடர்ந்து, தசைப் பிடிப்பு ஏற்பட்டதால், 15 நாட்களாக கடும் அவதிக்குள்ளாகி வருகிறது. ஓசூர் வனத்துறை, சேலம் மண்டல கால்நடைத்துறை டாக்டர்கள், நாமக்கல் கால்நடை ஆராய்ச்சி பல்கலை டாக்டர்கள், ராஜேஸ்வரிக்கு சிகிச்சையளிக்கின்றனர். யானை, உடல் நலம் பெற வேண்டி, நேற்று காலை, 6:00 முதல், 7:30 மணி வரை, ராஜகணபதி கோவிலில், ‘ம்ருங்யஜெய, ஆயுஸ்ய’ ஹோமம் நடந்தது. இதில், கோவில் உதவி கமிஷனர் தமிழரசு பங்கேற்றார். அதேபோல், காலை, 9:00 முதல், 10:00 மணி வரை, சுகவனேஸ்வரர் கோவிலில், ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜைக்கு பின், அர்ச்சகர்கள், யானைக்கு பிரசாதம் எடுத்துச் சென்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !