உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்புவனத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.

இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று காலை 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் நடந்தன. சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மார்ச் 28ம் தேதி காலை 10:00 மணிக்கும், தேரோட்டம் மார்ச் 29 காலை 9:45 மணிக்கும் நடைபெற உள்ளன. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், தெய்வசிகாமணி பட்டர் தலைமையில் கண்ணன் பட்டர், சிவா பட்டர், வீரமணி பட்டர் உள்ளிட்டோர் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !